×

சர்வதேச மகளிர் தினம்.. மாமல்லபுரத்தில் சுற்றுலா பயணிகளுக்கு இன்று இலவசம்: தொல்லியல் துறை அறிவிப்பு!!

சென்னை: பெண்களின் மகத்தான சாதனைகளை போற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச அளவில் மார்ச் 8 ஆம் தேதி பெண்கள் தினமாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இன்று பெண்கள் தினத்தை முன்னிட்டு அரசு சார்பிலும், தனியார் அமைப்புகள் சார்பிலும் பல இடங்களில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.

இந்த நிலையில், தமிழகத்தின் மிக முக்கியமான மற்றும் வரலாற்று சிறப்பு வாய்ந்த சுற்றுலா தளமான மாமல்லபுரத்தில், இன்று பெண்கள் தினத்தை முன்னிட்டு சுற்றுலா பயணிகள் புராதன சின்னங்களை கட்டணம் இன்றி இலவசமாக கண்டு களிக்கலாம் என்று தொல்லியல் துறை அறிவித்துள்ளது. அதன்படி மாமல்லபுரம் சுற்றுலாத்தலங்களை பார்வையாளர்கள் இன்று கட்டணமின்றி கண்டுகளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே உள்ள கொடும்பாளூர் மூவர் கோயில், சித்தன்னவாசல் குடைவரை கோயில் ஆகிய சுற்றுலா தளங்களில் இன்று சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி இலவசம் என தொல்லியல் துறை அறிவித்துள்ளது.

The post சர்வதேச மகளிர் தினம்.. மாமல்லபுரத்தில் சுற்றுலா பயணிகளுக்கு இன்று இலவசம்: தொல்லியல் துறை அறிவிப்பு!! appeared first on Dinakaran.

Tags : International Women's Day ,Mamallapuram ,Chennai ,Women's Day ,Dinakaran ,
× RELATED செங்கல்பட்டு – மாமல்லபுரம் இடையே...